Landmark Wiki

← கொழும்பு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

வெலிக்கடை சிறை

இலங்கையில் உள்ள ஒரு சிறை

பிற மொழிகள்: English · Español

முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

வெலிக்கடை சிறை என்றால் என்ன?

வெலிக்கடை சிறைச்சாலை (Welikada Prison) என்பது இலங்கையின் மிக உயர்ந்த பாதுகாப்பு வசதி கொண்டதும், மிகப்பெரிய ஒரு சிறைச்சாலையாகும்.

வெலிக்கடை சிறை எங்கே உள்ளது?

கொழும்பு; ஆயத்தொலைவு 6.9219, 79.8803.

இதன் கதை

வெலிக்கடை சிறைச்சாலை (Welikada Prison) என்பது இலங்கையின் மிக உயர்ந்த பாதுகாப்பு வசதி கொண்டதும், மிகப்பெரிய ஒரு சிறைச்சாலையாகும். இது 1841 ஆம் ஆண்டில் ஆளுநர் கேம்பல் தலைமையிலான பிரித்தானிய காலனித்துவ அரசாங்கத்தால் கட்டப்பட்டது. இச்சிறைச்சாலை 48 ஏக்கர் (190,000 சதுர மீட்டர்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில், சிறைச்சாலையின் உண்மையான கொள்ளளவை விட கூடுதலாக, சுமார் 1700 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதால், இது கடும் நெரிசலுக்கு உள்ளாகியுள்ளது. இந்தச் சிறையில் ஒரு தூக்கு மேடையும் (1959 முதல் பயன்படுத்தப்படாமல் உள்ளது) அதற்கெனத் தனியான ஒரு மருத்துவமனையும் அமைந்துள்ளன. இச்சிறைச்சாலை, சிறைத் துறையால் நிருவகிக்கப்படுகிறது. 1962-ல் நடந்த இராணுவப் புரட்சி முயற்சியைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இராணுவ, காவல்துறை அதிகாரிகள், வெலிக்கடை சிறையில் உள்ள வெடிகுண்டுப் பிரிவு எனப்படும் ஒரு சிறப்புப் பிரிவில் விசாரணைக்காக வைக்கப்பட்டனர். இந்த அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக, மேஜர் ஏ. ஹுலங்கமுவ தலைமையில், இலங்கை இலகு காலாட்படையிலிருந்து கூட்டுக்காவல் படை எனப்படும் ஒரு சிறப்புப் பாதுகாப்புப் பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்டது.

கொழும்பு: அருகிலுள்ள இடங்கள்

தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு

2.2 km தொலைவில்

விகாரமகாதேவி பூங்கா

2.4 km தொலைவில்

பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்

2.4 km தொலைவில்

சுதந்திர சதுக்கம், கொழும்பு

2.4 km தொலைவில்

தாமரைக் கோபுரம்

2.5 km தொலைவில்

National Art Gallery, Sri Lanka

2.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.