← எருசலேம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மேற்குச் சுவர்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
மேற்குச் சுவர் என்றால் என்ன?
மேற்குச் சுவர், அழுகைச் சுவர்/புலம்பற் சுவர் (எபிரேயம்: הכותל המערבי, எழுத்துப்பெயர்ப்பு: HaKotel HaMa'aravi; அரபு: حائط البراق, எழுத்துப்பெயர்ப்பு: Ḥā'iṭ Al-Burāq) எருசலேம் பழைய நகரில் கோவில் மலையின் மேற்கில் அமைந்துள்ளது.
மேற்குச் சுவர் எங்கே உள்ளது?
எருசலேம்; ஆயத்தொலைவு 31.7767, 35.2345.
இதன் கதை
மேற்குச் சுவர், அழுகைச் சுவர்/புலம்பற் சுவர் (எபிரேயம்: הכותל המערבי, எழுத்துப்பெயர்ப்பு: HaKotel HaMa'aravi; அரபு: حائط البراق, எழுத்துப்பெயர்ப்பு: Ḥā'iṭ Al-Burāq) எருசலேம் பழைய நகரில் கோவில் மலையின் மேற்கில் அமைந்துள்ளது. இது யூத தேவாலயத்தை சுற்றிக் காணப்பட்ட சுவரின் எஞ்சிய பகுதியும், மலை கோயிலுக்கு அடுத்த அதி புனித இடமுமாக யூதத்தில் காணப்படுகிறது. 17 தொடர்கள் உட்பட்ட அரைவாசி சுவர் வீதி மட்டத்திலிருந்து கீழே உள்ளன. இது இரண்டாம் கோவிலின் இறுதி காலத்திற்குரியனவென்றும், கி.மு. 19 இல் முதலாம் ஏரோதால் கட்டப்பட்டதென்றும் பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், அன்மைய ஆய்வு ஏரோதின் காலத்தில் வேலைகள் பூர்த்தியாகவில்லையென்பதை குறிப்பிடுகிறது. எஞ்சிய அடுக்கின் பகுதிகள் 7ம் நூற்றாண்டின் பின்பு இடம்பெற்றன. மேற்குச் சுவர் என்பது யூத பகுதியில் தெரியும் பெரிய சதுக்கம் மட்டுமல்ல, முழு கோயில் மலையையும் உள்ளடக்கிய மறைந்து கிடக்கும் அதன் கட்டமைப்பு என்பனவுமாகும். இசலாமியர் வாழும் பகுதியில் காணப்படும் 25 அடி (8 மீட்டர்) பகுதியான சிறிய மேற்குச் சுவரும் இதனுள் அடங்கும். இது யூதர்களின் செபம் செய்யும் இடமும் யாத்திரை செல்லும் இடமுமாக பல நூற்றாண்டுகளாகக் காணப்பட்டது. 4ம் நூற்றாண்டிலிருந்து இந்த இடம் யூதர்களுடன் தொடர்புபட்டு காணப்படுகின்றது என பழைய ஆதாரங்களிலிருந்து அறிய முடிகிறது.
எருசலேம்: அருகிலுள்ள இடங்கள்
Western Wall Plaza
80 m தொலைவில்
அல் அக்சா பள்ளிவாசல்
140 m தொலைவில்
எருசலேம் கோவில்
160 m தொலைவில்
பாறைக் குவிமாடம்
170 m தொலைவில்
இரண்டாம் கோவில்
170 m தொலைவில்
கோயில் நிறுவனம்
190 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.