← கெய்ரோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கிசாவின் பெரிய பிரமிடு
கெய்ரோவில் உள்ள மூன்று பெரும் பிரமிட்டுகளில் பெரியதும், பழங்கால ஏழு உலக அதிசயங்களில் மிகப்பழ
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கிசாவின் பெரிய பிரமிடு என்றால் என்ன?
கிசாவின் பெரிய பிரமிடு அல்லது கூபுவின் பிரமீடு மற்றும் சாப்சின் பிரமீடு (Great Pyramid of Giza) நவீன எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய கீசா நெக்ரோபோலிஸில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிடுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் ஆகும்.
கிசாவின் பெரிய பிரமிடு எங்கே உள்ளது?
கெய்ரோ; ஆயத்தொலைவு 29.9792, 31.1342.
இதன் கதை
கிசாவின் பெரிய பிரமிடு அல்லது கூபுவின் பிரமீடு மற்றும் சாப்சின் பிரமீடு (Great Pyramid of Giza) நவீன எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய கீசா நெக்ரோபோலிஸில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிடுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் ஆகும். இது பழங்கால ஏழு உலக அதிசயங்களில் மிகப்பழமையானதும் இன்றுவரை மீண்டிருப்பதுமாகும். இது பண்டைய எகிப்தை ஆண்ட 4-ஆவது வம்சத்தின் பாரோ கூபுவின் சமாதியாகும். இது கிமு 2560 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது பெரிய பிரமிட் 137 மீட்டர்கள் (481 அடி) உயரமும், ஒரு பக்கம் 235 மீட்டர்கள் (775 அடிகள்) கொண்ட சதுர வடிவ அடிப்பகுதி 5.5 எக்டேர்கள் (13.5 ஏக்கர்கள்) பரப்பளவையும் கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதனால் கட்டப்பட்ட, உலகின் மிக உயந்த அமைப்பாக இருந்துவந்தது. 1439ல் 143 மீட்டர்கள் உயரமான ஸ்ட்ராஸ்பர்க்கின் மின்ஸ்டர் இந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. இதன் சதுரவடிவ அடிப்பகுதியின் நான்கு பக்கங்களுக்குமிடையேயான நீள வழு 0.6 அங்குலங்கள் மட்டுமேயென்பதும், கோணங்கள் சரியான சதுர அமைப்பிலிருந்து 12 செக்கண்ட் அளவே விலகியிருப்பதுவும், கட்டுமான வேலையின் துல்லியத்தைக் காட்டுகிறது. இதன் சதுரவடிவப் பக்கங்கள் பெருமளவுக்கு அச்சொட்டாக கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்குத் திசைகளில் அமைந்துள்ளன.
கெய்ரோ: அருகிலுள்ள இடங்கள்
கிசா பிரமிடுத் தொகுதி
370 m தொலைவில்
காப்ராவின் பிரமிடு
470 m தொலைவில்
கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்
540 m தொலைவில்
மென்கௌரே பிரமிடு
930 m தொலைவில்
எகிப்தின் பெரிய அருங்காட்சியகம்
2.3 km தொலைவில்
Layer Pyramid
5.8 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.