← கெய்ரோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
காப்ராவின் பிரமிடு
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
காப்ராவின் பிரமிடு என்றால் என்ன?
காப்ராவின் பிரமிடு (Pyramid of Khafre) (அரபி: هرم خفرع, romanized: haram ḵafraʿ, IPA: [haram xafraʕ]) பண்டைய எகிப்தின் கிசா பிரமிடுத் தொகுதிகளில் இரண்டாவது உயரமான பிரமிடு ஆகும்.
காப்ராவின் பிரமிடு எங்கே உள்ளது?
கெய்ரோ; ஆயத்தொலைவு 29.9761, 31.1308.
இதன் கதை
காப்ராவின் பிரமிடு (Pyramid of Khafre) (அரபி: هرم خفرع, romanized: haram ḵafraʿ, IPA: [haram xafraʕ]) பண்டைய எகிப்தின் கிசா பிரமிடுத் தொகுதிகளில் இரண்டாவது உயரமான பிரமிடு ஆகும். பழைய எகிப்திய இராச்சியத்தை கிமு 2558 முதல் கிமு 2532 முடிய 26 ஆண்டுகள் ஆண்ட எகிப்தின் நான்காம வம்ச மன்னர் காப்ரா இப்பிரமிடை நிறுவினார். இந்த பிரமிடு கீசா நகரத்தில் உள்ளது. இப்பிரமிடிவின் அடிப்பாகம் 215.5 மீட்டர் நீளமும் (706 ft) மற்றும் 136.4 மீட்டர்கள் (448 அடி) உயரமும் கொண்டது.. இப்பிரமிடின் ஒவ்வொரு கல்லும் 2 டன் கொண்ட சுண்ணக்கல்லில் கட்டப்பட்டது. இதனருகில் கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ் மற்றும் மன்னர் கூபுவின் பிரமிடும் உள்ளது. எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் போது, மன்னர் காப்ராவின் பிரமிடு திறக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது. 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் (கிமு 1279 - கிமு 1213) கட்டளையின் படி, காப்ராவின் பிரமிடின் பெருங்கற்களைக் கொண்டு ஹெலியோபோலிஸ் நகரத்தில் ஒரு கோயிலைக் கட்டினார்.
கெய்ரோ: அருகிலுள்ள இடங்கள்
கிசா பிரமிடுத் தொகுதி
190 m தொலைவில்
மென்கௌரே பிரமிடு
470 m தொலைவில்
கிசாவின் பெரிய பிரமிடு
470 m தொலைவில்
கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்
660 m தொலைவில்
எகிப்தின் பெரிய அருங்காட்சியகம்
2.4 km தொலைவில்
Layer Pyramid
5.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.