← கொச்சி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மலை அரண்மனை, திரிப்பூணித்துறா
கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஓர் அரண்மனை
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
மலை அரண்மனை, திரிப்பூணித்துறா என்றால் என்ன?
மலை அரண்மனை எனப்படுகின்ற ஹில் பேலஸ் (Hill Palace) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொச்சியின் திருப்பூணித்துறையில் அமைந்துள்ள மிகப் பெரிய தொல்லியல் அருங்காட்சியகமாகும்.
மலை அரண்மனை, திரிப்பூணித்துறா எங்கே உள்ளது?
கொச்சி; ஆயத்தொலைவு 9.9526, 76.3642.
இதன் கதை
மலை அரண்மனை எனப்படுகின்ற ஹில் பேலஸ் (Hill Palace) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொச்சியின் திருப்பூணித்துறையில் அமைந்துள்ள மிகப் பெரிய தொல்லியல் அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகம் கொச்சி இராச்சிய மகாராஜா அரசின் நிர்வாக அலுவலகம் மற்றும் உத்தியோகபூர்வ இல்லமாகச் செயல்பட்டு வந்தது. 1865-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனை வளாகத்தில் 54 ஏக்கர்கள் (220,000 m2) பரப்பளவில் பாரம்பரிய பாணியில் கட்டபட்ட 49 கட்டிடங்கள் உள்ளன. இந்த வளாகத்தில் ஒரு தொல்லியல் அருங்காட்சியகம், ஒரு பாரம்பரிய அருங்காட்சியகம், மான் பூங்கா, வரலாற்று காலத்திற்கு முந்தைய பொருட்கள் கொண்ட பூங்கா, குழந்தைகள் பூங்கா ஆகியவை அமைந்துள்ளன. அருங்காட்சியகத்தின் வளாகத்தில் பல அரிய வகை மருத்துவத் தாவரங்கள் உள்ளன. தற்போது இந்த அரண்மனை கேரள மாநில தொல்லியல் துறையால் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை நகரிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர்கள் (6.2 mi) தொலைவில் அமைந்துள்ளது. சாலை மற்றும் இரயில் பாதை வழியாக இந்த அருங்காட்சியகத்திற்குச் செல்லலாம். கேரள அரசின் பாரம்பரிய விவகாரங்கள் துறையால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனமான பாரம்பரிய ஆய்வு மையம் (சிஎச்எஸ்) இந்த வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
கொச்சி: அருகிலுள்ள இடங்கள்
பூர்ணாத்திரேயசர் கோயில்
2.5 km தொலைவில்
வில்லிங்க்டன் தீவு
9.8 km தொலைவில்
புனித ஜார்ஜ் குருமுதல்வர் தேவாலயம், இடப்பள்ளி
10.0 km தொலைவில்
புனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில்
10.3 km தொலைவில்
மட்டாஞ்சேரி பாலம்
10.8 km தொலைவில்
போல்கட்டி மாளிகை
11.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.