Landmark Wiki

← சென்னை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை

பிற மொழிகள்: English

இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை என்றால் என்ன?

இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (Integral Coach Factory) அல்லது ஐ.

இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை எங்கே உள்ளது?

சென்னை; ஆயத்தொலைவு 13.0983, 80.2084.

இதன் கதை

இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (Integral Coach Factory) அல்லது ஐ.சி.எஃப் (ICF) பயணிகளுக்கானப் பெட்டிகளை தயாரிக்க 1955ஆம் ஆண்டு சுவிஸ் தொழில்நுட்பத்துடன் ஏற்படுத்தப்பட்ட இந்திய இரயில்வேயின் முதன்மை தொழிற்சாலையாகும். சென்னையின் புறநகர்ப் பகுதி பெரம்பூரில் இந்திய விடுதலைக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தொழிற்சாலையில் இலகுரக, முழுமையும் எஃகினாலும் முழுமையும் காய்ச்சி இணைத்த மூட்டுக்களாலானதுமான பயணிகள் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்திய ரயில்வே பயணிகளின் ரயில் பெட்டிகள் உற்பத்தியில் ஒரு முதன்மையான உற்பத்தி பிரிவாக இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பெட்டிகள் பெரும்பாலும் இந்திய இரயில்வேக்கே சென்றாலும் வெளிநாட்டு தொடர்வண்டி நிறுவனங்களுக்கும் இவை ஏற்றுமதி ஆகின்றன. தாய்லாந்து, பர்மா, தைவான், சாம்பியா,பிலிப்பைன்ஸ், தான்சானியா, உகாண்டா, வியட்நாம், நைஜீரியா, மொசாம்பிக் மற்றும் பங்களாதேசம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன.

சென்னை: அருகிலுள்ள இடங்கள்

திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோயில்

2.3 km தொலைவில்

ராதா ரீஜண்ட் ஹோட்டல், சென்னை

3.7 km தொலைவில்

வடபழனி ஆண்டவர் கோவில்

5.1 km தொலைவில்

சென்னை வான்காணகம்

5.3 km தொலைவில்

அரசு அருங்காட்சியகம், சென்னை

6.1 km தொலைவில்

வள்ளுவர் கோட்டம்

6.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.