Landmark Wiki

← அல்-உக்சுர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கருனகு

பண்டைய எகிப்திய கோயில் தொகுதி

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

கருனகு
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கருனகு என்றால் என்ன?

கர்னக் என்பது, எகிப்து நாட்டில் உள்ள ஒரு சிறிய ஊர் ஆகும்.

கருனகு எங்கே உள்ளது?

அல்-உக்சுர்; ஆயத்தொலைவு 25.7183, 32.6583.

இதன் கதை

கர்னக் என்பது, எகிப்து நாட்டில் உள்ள ஒரு சிறிய ஊர் ஆகும். நைல் நதியின் கரையில் அமைந்துள்ள இவ்வூர் லக்சோரில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் உள்ளது. மிகப் பழமையான எகிப்தியக் கோயில்கள் அமைந்துள்ளதே இவ்வூர் முக்கியத்துவம் பெறக் காரணமாகும். கர்னக் கோயில் இவ்வூரின் கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதியிலும் இரண்டு மடங்கு அளவுள்ளதாகும். கர்னாக் ஒரு ஊர் என்பதிலும், ஒரு கோயில் தொகுதியாகவே பெரிதும் அறியப்படுகிறது. கர்னாக்கில் மத்தியகால இராச்சியத்தை (கிமு 2055 – கிமு 1650) ஆண்ட முதலாம் செனுஸ்ரெத் எனும் பார்வோன் வெள்ளைக் கோயிலை நிறுவினார். கிமு 2050-களில் கட்டப்பட்ட அமூன் மற்றும் இரா கடவுளர் கோயில்கள் தாலமி வம்சம் வரை (கிமு 30) நல்ல நிலையில் இருந்தது. பின்னர் சிதிலமைடைந்தது போயிற்று. இது எகிப்தில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.இந்நகரத்த்தின் கர்னாக் கோயிலில் பண்டைய எகிப்திய மன்னர்களின் பெயர்கள் கொண்ட கர்னாக் மன்னர்கள் பட்டியல் அடங்கிய கல்வெட்டு வரிசைகள் கிடைத்துள்ளது. கர்னக் கோயில் பகுதி ஒரு பாரிய திறந்தவெளி அருங்காட்சியகம் என்பதுடன், உலகின் மிகப் பெரிய பண்டைய சமயம் சார்ந்த இடமாகவும் திகழ்கின்றது. எகிப்தில் கெய்ரோவுக்கு அண்மையில் உள்ள கீசாவின் மாபெரும் பிரமிட்களுக்கு அடுத்தபடியாக, கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்ற இடமும் இதுவேயாகும். இது நான்கு பகுதிகளைக் கொண்டது.

அல்-உக்சுர்: அருகிலுள்ள இடங்கள்

லக்சர் அருங்காட்சியகம்

1.8 km தொலைவில்

அல்-உக்சுர் கோயில்

2.8 km தொலைவில்

மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள்

4.8 km தொலைவில்

ராமேசியம்

4.9 km தொலைவில்

தேர் எல் பகாரி

5.5 km தொலைவில்

Mortuary temple of Hatshepsut

5.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.