Landmark Wiki

← அல்-உக்சுர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அல்-உக்சுர் கோயில்

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Melayu · Español

அல்-உக்சுர் கோயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அல்-உக்சுர் கோயில் என்றால் என்ன?

அல்-உக்சுர் கோயில் (Al 'Uqṣur temple or Luxor temple) இன்று லக்சோர் என அழைக்கப்படும் நகரத்தில் நைல் நதியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள பெரிய பண்டைய எகிப்தியக் கோயில் ஆகும்.

அல்-உக்சுர் கோயில் எங்கே உள்ளது?

அல்-உக்சுர்; ஆயத்தொலைவு 25.7000, 32.6392.

இதன் கதை

அல்-உக்சுர் கோயில் (Al 'Uqṣur temple or Luxor temple) இன்று லக்சோர் என அழைக்கப்படும் நகரத்தில் நைல் நதியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள பெரிய பண்டைய எகிப்தியக் கோயில் ஆகும். இக் கோயில் அமூன், மூத், கோன்சு எனும் பண்டைய எகிப்தியர்களின் மூன்று கடவுளர்களுக்காக அமைக்கப்பட்டது. பழங்கால எகிப்தின் புது எகிப்து இராச்சியக் காலத்தில் கொண்டாடப்பட்டு வந்த ஒப்பெத் திருவிழா இக்கோயிலை மையமாகக் கொண்டே இடம்பெற்றது. இவ் விழாவில், அமூன் கடவுளின் சிலை, அருகாமையில் உள்ள கர்னாக் கோயிலிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும். இங்கே அமூன், அவரது துணைவியான மூத் எனும் பெண் கடவுளுடன் தங்க வைக்கப்பட்டு, விழாக் கொண்டாடப்படும். இக் கோயிலுக்கான நுழைவாயில் வடக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த நுழைவாயிலுக்குச் செல்லும் பாதையின் இரு மருங்கும் வரிசையாக ஸ்ஃபிங்ஸ் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப் பாதை, பிற்காலத்தில், 30 ஆவது அரச வம்சத்தின் பார்வோன் முதலாம் நெக்தனெபோவின் காலத்தில் அமைக்கப்பட்டது. கோயிலின் நுழைவாயிலில், 24 மீட்டர் (79 அடி) உயரம் கொண்ட கோபுரம் போன்ற நுழைவாயில் உள்ளது. இது இரண்டாவது ராமேசஸினால் கட்டுவிக்கப்பட்டது. இதில் இரன்டாம் ராமேசஸின் போர் வெற்றிகள் குறித்த கட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. பிற்காலத்திலும், குறிப்பாக, நூபிய மற்றும் குஷ் மரபுகளைச் சேர்ந்த அரசர்களும் தமது வெற்றிகளை இதிலே பதிவு செய்துள்ளனர்.

அல்-உக்சுர்: அருகிலுள்ள இடங்கள்

லக்சர் அருங்காட்சியகம்

1.0 km தொலைவில்

கருனகு

2.8 km தொலைவில்

மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள்

3.7 km தொலைவில்

ராமேசியம்

4.2 km தொலைவில்

மெடிநெத் அபு

4.4 km தொலைவில்

தேர் அல்-மதினா

4.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.