Landmark Wiki

← ஐதராபாது: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மக்கா பள்ளிவாசல், ஐதராபாத்து

இந்தியாவில்லுள்ள ஒரு மசூதி

பிற மொழிகள்: English · 中文

மக்கா பள்ளிவாசல், ஐதராபாத்து
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மக்கா பள்ளிவாசல், ஐதராபாத்து என்றால் என்ன?

மக்கா பள்ளிவாசல் அல்லது மக்கா மஸ்ஜித் (Makkah Masjid), என்பது இந்தியாவின் தெலங்காணாலுள்ள ஐதராபாத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலாகும்.

மக்கா பள்ளிவாசல், ஐதராபாத்து எங்கே உள்ளது?

ஐதராபாது; ஆயத்தொலைவு 17.3606, 78.4733.

இதன் கதை

மக்கா பள்ளிவாசல் அல்லது மக்கா மஸ்ஜித் (Makkah Masjid), என்பது இந்தியாவின் தெலங்காணாலுள்ள ஐதராபாத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலாகும். 20,000 பேர் கூடி தொழுகை புரியும் திறன் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பள்ளிவாசல் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது. இது பழைய நகரமான ஐதராபாத்தின் மையத்தில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும் , இது சார்மினார், சௌமகல்லா அரண்மனை மற்றும் இலாட் பஜார் ஆகிய வரலாற்று முக்கிய அடையாளங்களுக்கு அருகில் உள்ளது. குதுப் ஷாஹி வம்சத்தின் ஐந்தாவது ஆட்சியாளரான முஹம்மது குலி குதுப் ஷா , இசுலாத்தின் புனிதமான இடமான மக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணிலிருந்து செங்கற்களை தயாரிக்கும்படி கட்டளையிட்டார். மேலும் அவற்றை பள்ளிவாசலின் மைய வளைவின் கட்டுமானத்தில் பயன்படுத்தினார். மேலும், இதற்கு "மக்கா பள்ளிவாசல்" என்ற பெயரும் வழங்கினார். இது முஹம்மது குலி குதுப் ஷா திட்டமிட்டபடி நகரின் மையமாக உருவாகியது. .

ஐதராபாது: அருகிலுள்ள இடங்கள்

சார்மினார்

190 m தொலைவில்

சார் காமன்

230 m தொலைவில்

சௌமகல்லா அரண்மனை

310 m தொலைவில்

பாத்ஷாஹி நினைவு மண்டபம்

980 m தொலைவில்

சலார் ஜங் அருங்காட்சியகம்

1.4 km தொலைவில்

மாநில மத்திய நூலகம், ஐதராபாத்

1.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.