← கெய்ரோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சக்காரா
எகிப்தின் பண்டைய தொல்லியல் நகரம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
சக்காரா என்றால் என்ன?
சக்காரா (Saqqara) (அரபி: سقارة, Egyptian Arabic pronunciation: [sɑʔˈʔɑːɾɑ]), மெம்பிசை தலைநகராகக் கொண்ட பண்டைய எகிப்திய பார்வோன்களின் கல்லறைகள் கொண்ட தொல்லியல் நகரம் ஆகும்.
சக்காரா எங்கே உள்ளது?
கெய்ரோ; ஆயத்தொலைவு 29.8711, 31.2164.
இதன் கதை
சக்காரா (Saqqara) (அரபி: سقارة, Egyptian Arabic pronunciation: [sɑʔˈʔɑːɾɑ]), மெம்பிசை தலைநகராகக் கொண்ட பண்டைய எகிப்திய பார்வோன்களின் கல்லறைகள் கொண்ட தொல்லியல் நகரம் ஆகும். இப்பண்டைய நகரம் கீழ் எகிப்தில் உள்ளது. இப்பண்டைய சக்காரா நகரத்தில், பழைய எகிப்து இராச்சியததை ஆண்ட ஜோசெர் மன்னரின் பிரமிடு, உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது. சக்கரா நகரத்தின் ஜோசர் பிரமிடு செவ்வக வடிவில் படிக்கட்டுகள் மற்றும், மேசை போன்ற அமைப்புகளுடன் கூடியது. சக்காரா நகரம், எகிப்தின் தேசியத் தலைநகரமான கெய்ரோ பெருநகரத்திற்கு தெற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சக்கார நகரத்தின் பரப்பளவு 7 கீழ் 1.5 km (4.35 கீழ் 0.93 mi) ஆகும். எகிப்தின் துவக்க கால அரச மரபுகளில் ஒன்றான எகிப்தின் மூன்றாம் வம்ச மன்னர்களால் சக்காரா நகரத்தில் பார்வோன்கள் மற்றும் அரச குடும்பத்தினர்களின் கல்லறைப் பிரமிடுகள் கட்டப்பட்டது. சக்கரா நகரத்தின் வடக்கில் அபுசர் பகுதியும், தெற்கில் தச்சூர் தொல்லியல் நகரம் உள்ளது. மெம்பிசின் நகரத்தின் கிசாவின் பெரிய பிரமிடு வளாகம் முதல் முதல் சக்காரா நகரம் முதல் தச்சூர் நகரம் வரையிலான கல்லறை வளாகங்களை யுனெஸ்கொ நிறுவனம், 1979-இல் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.
கெய்ரோ: அருகிலுள்ள இடங்கள்
ஜோசெர் பிரமிடு
30 m தொலைவில்
உனாஸ் பிரமிடு
350 m தொலைவில்
Pyramid of Userkaf
370 m தொலைவில்
Buried Pyramid
660 m தொலைவில்
நெபெரிர்கரே பிரமிடு
3.0 km தொலைவில்
சகுரா பிரமிடு
3.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.