← தில்லி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
இலட்சுமிநாராயண் கோயில்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
இலட்சுமிநாராயண் கோயில் என்றால் என்ன?
இலட்சுமிநாராயணன் கோயில் (Laxminarayan Temple) மற்றும் பிர்லா மந்திர் என்றும் அழைக்கப்படும் இக்கோயில், இலட்சுமிநாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் தில்லியில் உள்ள ஒரு இந்துக் கோவிலாகும்.
இலட்சுமிநாராயண் கோயில் எங்கே உள்ளது?
தில்லி; ஆயத்தொலைவு 28.6327, 77.1989.
இதன் கதை
இலட்சுமிநாராயணன் கோயில் (Laxminarayan Temple) மற்றும் பிர்லா மந்திர் என்றும் அழைக்கப்படும் இக்கோயில், இலட்சுமிநாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் தில்லியில் உள்ள ஒரு இந்துக் கோவிலாகும். லக்ஷ்மிநாராயண் பொதுவாக மும்மூர்த்தியில் பாதுகாப்பாளராக இருக்கும் விஷ்ணுவைக் குறிப்பதாகும். இவர் தனது துணைவி இலட்சுமியுடன் இருக்கும்போது நாராயணன் என்றும் அழைக்கப்படுகிறார். மகாத்மா காந்தியால் திறக்கப்பட்ட இந்த கோயில், ஜுகல் கிசோர் பிர்லா என்பவரால் 1933 மற்றும் 1939 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. அண்மைக் கோயில்கள் சிவன், கிருட்டிணர் மற்றும் புத்தருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. இது தில்லியில் கட்டப்பட்ட முதல் பெரிய இந்துக் கோயிலாகும். இந்த கோயில் 7.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பல சிவாலயங்கள், நீரூற்றுகள் மற்றும் இந்து மற்றும் தேசிய சிற்பங்களுடன் ஒரு பெரிய தோட்டத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் சொற்பொழிவுகளுக்காக கீதா பவன் என்ற அரங்கம் உள்ளது. தில்லியின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றான இந்த கோயில் கிருட்டிண ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.
தில்லி: அருகிலுள்ள இடங்கள்
குருத்துவாரா பங்களா சாகிப்
1.2 km தொலைவில்
சந்தர் மந்தர், புதுதில்லி
1.8 km தொலைவில்
குடியரசுத் தலைவர் இல்லம்
2.0 km தொலைவில்
தேசிய அருங்காட்சியகம், புது தில்லி
3.1 km தொலைவில்
பதேபூரி பள்ளிவாசல்
3.5 km தொலைவில்
இந்தியாவின் வாயில்
3.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.