Landmark Wiki

← தில்லி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

குதுப் மினார் வளாகம்

தில்லியில் உள்ள கட்டிடம்

பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

குதுப் மினார் வளாகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

குதுப் மினார் வளாகம் என்றால் என்ன?

குதுப் மினார் வளாகம் (Qutb Minar complex) என்பது இந்தியாவில் தில்லியில் உள்ள மெக்ராலியில் உள்ள தில்லி சுல்தானகத்தின் நினைவுச்சின்னங்கள் மற்றும் கட்டிடங்கள் ஆகும்.

குதுப் மினார் வளாகம் எங்கே உள்ளது?

தில்லி; ஆயத்தொலைவு 28.5244, 77.1854.

இதன் கதை

குதுப் மினார் வளாகம் (Qutb Minar complex) என்பது இந்தியாவில் தில்லியில் உள்ள மெக்ராலியில் உள்ள தில்லி சுல்தானகத்தின் நினைவுச்சின்னங்கள் மற்றும் கட்டிடங்கள் ஆகும். இந்த வளாகத்தில் உள்ள குதுப் மினார் "வெற்றி கோபுரம்" என்றும், சூபி மதத்துறவி குவாஜா குத்புதீன் பக்தியார் காக்கியின் பெயரிடப்பட்டது. இதன் கட்டமைப்பு குதுப்-உத்-தின் ஐபக் என்பவரால் தொடங்கப்பட்டது. பின்னர் அவர் மம்லூக்கிய வம்சத்தின் (குலாம் வான்ஷ்) டெல்லியின் முதல் சுல்தானானார். கட்டுமானத்தை அவரது வாரிசான சம்சுத்தின் இல்த்துமிசு (அல்தமாஷ் எனவும் அறியப்படுகிறார்), இறுதியாக கி.பி 1368 இல் துக்ளக் வம்சத்தைச் சேர்ந்த (1320-1412) டெல்லியின் சுல்தானான பிரோசு சா துக்ளக் அவர்களால் நிறைவு செய்யப்பட்டது. குபத்-உல்-இஸ்லாம் மசூதி பின்னர் குவாதத்-உல் இஸ்லாத்தில் சிதைக்கப்பட்டது. இது குதுப் மினாருக்கு அடுத்ததாக நிற்கிறது. துக்ளக்குகள், அலாவுதீன் கில்சி மற்றும் பிரித்தானியர்கள் உட்பட பல ஆட்சியாளர்கள் இந்த வளாகத்தில் கட்டமைப்புகளைச் சேர்த்தனர். குதுப் மினார் மற்றும் குவ்வத் உல்-இஸ்லாம் மசூதி தவிர, இந்த வளாகத்தில் உள்ள மற்ற கட்டுமானங்களில் அலாய் தர்வாசா வாயில், அலாய் மினார் மற்றும் இரும்புத் தூண் ஆகியவை அடங்கும் . குவ்வத் உல்-இஸ்லாம் மசூதி 27 பழைய சமண கோவில்களை அழித்த பின்னர் கட்டப்பட்டது.

தில்லி: அருகிலுள்ள இடங்கள்

குதுப் நினைவுச்சின்னங்கள்

20 m தொலைவில்

அலாய் தர்வாசா

30 m தொலைவில்

தில்லி இரும்புத் தூண்

50 m தொலைவில்

துக்ளகாபாத் கோட்டை

7.5 km தொலைவில்

சப்தர்ஜங்கின் கல்லறை

7.6 km தொலைவில்

தாமரைக் கோயில்

7.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.