← இந்தியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Español
விரைவான பதில்கள்
சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம் என்றால் என்ன?
சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம் (Sundarbans National Park) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் அமைந்துள்ள உயிர்க்கோளக் காப்பகமாகும்.
சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம் எங்கே உள்ளது?
இந்தியா; ஆயத்தொலைவு 21.8380, 88.8852.
இதன் கதை
சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம் (Sundarbans National Park) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் அமைந்துள்ள உயிர்க்கோளக் காப்பகமாகும். கல்கத்தாவிலிருந்து தென் கிழக்குத் திசையில் 100 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது. உலகளவில் பெரும்பரப்பளவில் காணப்படும் சதுப்புநிலக்காடுகளைக் கொண்ட சுந்தரவனம் யுனெஸ்கோவின் மனிதனும் உயிர்க்கோளமும் (MAB)என்ற திட்டத்தின் கீழ் 1989ஆம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. உலக பாரம்பரியக் களமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கொல்கத்தாவில் கங்கையின் கழிமுகத்தில் காணப்படும் இதன் பரப்பளவு 9630 ச.கி.மீட்டராகும். உலகளவில் புலிகளுக்கு உறைவிடம் தரும் மிகப்பெரிய சதுப்புநிலகாடுகள் இக்காப்பகத்தில் மட்டும் காணப்படுகிறது. வங்காளப்புலி காப்புப்பகுதி, சுந்தரவனம் தேசியப்பூங்கா ஆகியன இதன் மையமண்டலத்தில் அமைந்துள்ளன. மேலும் சச்னேகாலி வனவிலங்கு சரணாலயம், லோத்தியன் தீவு வனவிலங்கு சரணாலயம் மற்றும் ஹாலிடே தீவு வனவிலங்கு சரணாலயம் ஆகிய மூன்று சரணாலயங்களும் இக்காப்பகத்தினுள் உள்ளன.
இந்தியா: அருகிலுள்ள இடங்கள்
சாந்திநிகேதன்
239.2 km தொலைவில்
கொனார்க் சூரியக் கோயில்
362.1 km தொலைவில்
நாளந்தா
507.6 km தொலைவில்
மகாபோதிக் கோயில், புத்தகயை
509.1 km தொலைவில்
மானசு தேசியப் பூங்கா
580.8 km தொலைவில்
கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா
649.5 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.