Landmark Wiki

← ஐதராபாது: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தோலி பள்ளிவாசல்

பிற மொழிகள்: English

தோலி பள்ளிவாசல்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தோலி பள்ளிவாசல் என்றால் என்ன?

தோலி பள்ளிவாசல் (Toli Masjid) (கி.

தோலி பள்ளிவாசல் எங்கே உள்ளது?

ஐதராபாது; ஆயத்தொலைவு 17.3746, 78.4390.

இதன் கதை

தோலி பள்ளிவாசல் (Toli Masjid) (கி.பி 1671), தம்ரி பள்ளிவாசல் என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் தெலங்காணாவின் ஐதராபாத்தில் கார்வானில் உள்ள ஒரு பள்ளிவாசலாகும். இது சார்மினார் செல்லும் வழியில் கோல்கொண்டா கோட்டையிலிருந்து 2 கி.மீ. (1082 ஏ.எச்) தொலைவில் அமைந்துள்ளது. குதுப் ஷாஹி வம்சத்தின் ஏழாவது சுல்தான் அப்துல்லா குதுப் ஷா ஆட்சியின் போது மிர் மூசா கான் மஹால்தரால் கட்டப்பட்டது. கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் விருது பெற்ற இது இந்திய தொல்ல்லியல் ஆய்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட பாரம்பரியத் தளமாகும். கட்டிடக்கலை அளவில் இது மக்கா பள்ளிவாசலுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. பொ.ச.1671இல் சுல்தான் அப்துல்லா குதுப் ஷாவின் ஆட்சியில் மக்கா பள்ளிவாசலை கட்டியவரும் அரச கட்டிடக் கலைஞரான மிர் மூசா கான் மஹால்தரால் கட்டப்பட்டது. இது குதுப் ஷாஹி கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். அரச பதிவுகளில் "குல்சார்-இ-அசாஃபியா" என்று ஒரு அத்தியாயம் உள்ளது. அரச கட்டிடக் கலைஞர் பள்ளிவாசலைக் கட்டும் போது, அதற்காக செலவழித்த ஒவ்வொரு ரூபாயிலும் ஒரு தமரி / தம்பிடியாக (அப்போது புழக்கதிலிருந்த நாணயம்) அவருக்கு வழங்கப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட தொகையை இந்த பள்ளிவாசலைக் கட்ட மூசா கான் பயன்படுத்தினார்.

ஐதராபாது: அருகிலுள்ள இடங்கள்

குல்சம் பேகம் பள்ளிவாசல்

470 m தொலைவில்

சுதா கார்கள் அருங்காட்சியகம்

2.6 km தொலைவில்

நேரு விலங்கியல் பூங்கா

2.9 km தொலைவில்

சௌமகல்லா அரண்மனை

3.9 km தொலைவில்

பாத்ஷாஹி நினைவு மண்டபம்

3.9 km தொலைவில்

மக்கா பள்ளிவாசல், ஐதராபாத்து

4.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.